உயிரை குடிக்கும் சர்க்கரை! ஆய்வாளர்கள் எச்சரிக்கை தகவல்

நாம் தினசரி பயன்படுத்தும் உப்பை விட சர்க்கரை தான் ஆபத்தானது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வயது அதிகரிக்க அதிரிக்க உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவர்.
மேலும், இதயக் கோளாறு மற்றும் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் உப்பை எடுத்துக் கொள்ள கூடாது எனவும் கண்டிப்போடு சொல்வர்.
ஆனால் உப்பை விட சர்க்கரை தான் இரத்தக் கொதிப்பு, இதயப் பிரச்சனை ஆகியவற்றை உருவாக்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் படி, பதப்படுத்தப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானத்தில் சேர்க்கப்படும் சர்க்கரை உடலுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரத்தக் கொதிப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாக வாய்ப்பிருப்பதாகவும், 2025ம் ஆண்டில் சுமார் 25 சதவீத மரணங்கள் அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதால் ஏற்படலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இப்போதிருந்தே சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

உயிரை குடிக்கும் சர்க்கரை! ஆய்வாளர்கள் எச்சரிக்கை தகவல் Rating: 4.5 Diposkan Oleh: Unknown