நட்சத்திரக் கூட்டத்தில் கருந்துளை!

பூமியில் இருந்து, 22 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள, “ஒபியஸ்’ என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் கருந்துளை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, “குளோபுலர் கிளஸ்டர்’ என்னும் நட்சத்திரக் கூட்டத்தில், இரண்டு கருந்துளைகள் இருப்பதை, மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. குளோபுலர் கிளஸ்ட்டரில், மற்றுமொரு கருந்துளையான, “எம் 62′யை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு நட்சத்திரக் கூட்டங்களில், கருந்துளைகள் காணப்படுவது சாதாரணமானதா அல்லது அரிய நிகழ்வா என்பது குறித்த சர்ச்சை இருந்தது.

இந்நிலையில், “”நட்சத்திர கூட்டங்களில் கருந்துளைகள் காணப்படுவது சாதாரணமானது. நட்சத்திர கூட்டத்தில் உள்ள, சில நட்சத்திரங்கள் சிதைந்து அழிவதால், கருந்துளை ஏற்படுகிறது; அதன் ஈர்ப்புத் தன்மை பலமாக உள்ளது,”என, வானவியல் பேராசிரியர் லாரா சவுகியுக் கூறியுள்ளார்.

நட்சத்திரக் கூட்டத்தில் கருந்துளை! Rating: 4.5 Diposkan Oleh: Unknown